2021 குரு பெயர்ச்சி ; ராஜயோகம் வரப்போகும் ராசியினர் இவர்கள்தான்!
இந்த பிலவ ஆண்டில் அதாவது 2021,2022ஆம் ஆண்டில் குருபகவான் மகரம், கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் திகதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் குருபகவான்.
திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி பகல் 02.22 மணியளவில் மகர ராசிக்கு திரும்பினார்.
அக்டோபர் 18ம் திதி மீண்டும் இயல்பான வேகத்தில் கும்பத்தை நோக்கிச் செல்வார். கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13ம் திகதி பெயர்ச்சி ஆவார். மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் குருபகவான் கார்த்திகை 4ஆம் திகதி நவம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.31 மணியளவில் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் திகதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார்.
கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் கும்பத்திற்கு கொடுக்கும் பலன்கள் என்னென்ன?
கும்பம்
சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, ஜென்ம ராசி, 2ஆம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப் போகிறார். செப்டம்பர் முதல் நேர்கதியில் விரைய ஸ்தானத்தில் பயணிக்கப் போகும் குருபகவான் நவம்பர் மாதம் முதல் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு வந்து அமர்கிறார்.
குருவின் சஞ்சாரமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. ஏழரை சனியில் விரைய சனி நடைபெறுகிறது. சம்பாதிக்கும் பணம் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகிறதே என்ற கவலை இருந்தாலும் குருபகவான் உங்களுக்கு நிறைய பண வரவை ஏற்படுத்தி கொடுப்பார்.
புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம் என்றாலும் சுய ஜாதகத்தில் உங்களுக்கு என்ன தசை நடைபெறுகிறது என்று பார்த்து தொடங்கலாம். வேலையில் அதிக கவனம் தேவை.
வியாபாரிகளுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.
கடையை நவீன மயமாக்குவீர்கள். வணிகச் சங்கத்தில் உங்களுக்கென்று தனி இடம் - பதவி உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு:திறமைகள் பளிச்சிடும். அலுவலகத்தில் சின்னச் சின்ன முரண்பாடுகள் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது. வெளிநாட்டு நிறுவனங்களால் ஆதாயம் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சுபச் செலவுகளைத் தருவதாகவும் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும். பரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணியில் அருளும் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்கி வழிபடுங்கள்; எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இருக்கும் வேலையை விட்டு விட்டு பறக்க நினைக்க வேண்டாம்.
குடும்பத்தில் சில பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் எளிதில் சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும் இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். பிள்ளைகளின் உயர்கல்விக்கு அதிக செலவு செய்வீர்கள்.