கடந்த ஆண்டில் தவறான முடிவு எடுத்த 200 சிறுவர்கள்
கடந்த 2024ம் ஆண்டில் சுமார் 200 சிறுவர்கள் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சமூக மருத்துவ நிபுணர்களின் சங்கத் தலைவர் டொக்டர் கபில ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டில் 113 சிறுவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களினால் சிறுவர்கள் தவறான முடிவெடிடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தவறான முடிவெடிப்பதனை தடுக்க சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வதனை தடுப்பதற்கு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.