இலங்கையில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
புற்றுநோயால் இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்ஆலோசகர் சமூக மருத்துவர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.
முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த நிலைமையைத் தணிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆண்டுதோறும் 900 சிறுவர் பருவ புற்றுநோய் தொற்றாளர்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டில், அடையாளம் காணப்பட்ட அனைத்து புற்றுநோய் நோயாளிகளில், 904 பேர் சிறுவர்கள் ஆவர். கடந்த 15 ஆண்டுகளில் தரவுகளைப் பார்க்கும்போது, சிறுவர் பருவ புற்றுநோய் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.
இப்போது, ஆண்டுதோறும் சுமார் 900 சிறுவர் பருவ புற்றுநோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் இறப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்ஆலோசகர் சமூக மருத்துவர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.