புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசு!
புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வாங்கிய ஐந்துபேர் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளதாக தெரிவித்த அவர்ர், இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அவர்களிற்கு பணமும் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பணம் பதவிகளை வழங்குவதற்காக சிலர் அவர்களின் வீடுகளிற்கு சென்றுள்ளதாக விமல்வீரவன்ச தெரிவித்ததாகவும் நளின் குறிப்பிட்டார்.
நேற்று நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களிற்கு 2மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவுசெய்ய முடியாத நிலையில் நாடு காணப்படுகின்ற நிலையில் இந்த பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
மேலும் மருந்துகள் இல்லாமல் 50க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் இறந்துள்ளதாகவும் இது படுகொலை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார கூறினார்.