இலங்கையில் தொடரும் சோகம்: மண்சரிவில் சிக்கி 2 பேர் பலி: மூவர் மாயம்!
குருணாகல் மற்றும் கேகாலையில் இரண்டு வீடுகளின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கேகாலை, ஹத்னகொட பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தந்தையும் மகனும் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மண்மேடு சரிவில் இருந்து தாயார் மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் இராணுவம் மற்றும் நிவாரணக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குருணாகல், தொடம்கஸ்லந்த கொரோச பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வயோதிபத் தம்பதிகள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். பலியானவர்கள் 65 மற்றும் 70 வயதுடையவர்கள்.