ஓன்லைனில் பொருட்களை வாங்கிவிட்டு கைவரிசையை காட்டிய நபர்களுக்கு நேர்ந்த கதி!
ஓன்லைனில் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனையாளருக்குப் பணம் செலுத்த மறுத்த இருவரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 4 கைத்தொலைபேசிகள், 2 மடிக்கணினிகள் மற்றும் ஒரு ரவுட்டர் என்பனவும், இணைய விற்பனையாளர் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் 2 கைக்கடிகாரங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இணைய விற்பனையாளரின் முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாரியபொல மற்றும் சுனந்தபுர பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.