20 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற இருவர் அதிரடியாக கைது
20 இலட்சம் ரூபாய் லஞ்சமாக பணத்தைக் கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவருருமாக இரண்டு சந்தேக நபர்களை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
பேராதனைப் போதனா மருத்துவமனைக்கு, 2027 ஆம் ஆண்டுக்காக உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு, தமது தந்தை மற்றும் மாமனாரின் பெயர்களில் விலைமனு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காகவும், அதன் மூலம் போட்டித்தன்மையைத் தவிர்ப்பதற்காகவும் ஆரம்பத்தில் 30 இலட்சம் ரூபாவை முதலாவது சந்தேக நபர், முறைப்பாட்டாளரிடம் கோரியுள்ளார்.

30 நிமிட இடைவெளிகளில் கைது
பின்னர் இந்த தொகை 25 இலட்சம் ரூபாவாகக் குறைக்கப்பட்டு, இறுதியாக 20 இலட்சம் ரூபாய் கையூட்டலாக பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று காலை கம்பளை அஞ்சல் நிலைய வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து கையூட்டல் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் கம்பளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவரும் சுமார் 30 நிமிட இடைவெளிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.