விபத்துக்களால் 2381 பேர் உயிரிழப்பு
2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நவம்பர் 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 2257 பாதிப்புக்குள்ளான நிலையில் 2381 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீதி விபத்துகள் காரணமாக ஒரு நாளைக்கு 8 பேர் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது. விபத்துகளில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், அந்த எண்ணிக்கை 850 என்றும் தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் 5778 கடுமையான விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 9572 சிறு விபத்துச் சம்பவங்களும், 4385 சேதத்தை ஏற்படுத்திய விபத்துச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் (2025) இடம்பெற்ற 2545 மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்துகளில் 2692 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது