1990 ஆம்புலன்ஸ் சேவை தொடர்பில் வெளியான மிக முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அவசர தேவைகளுக்காக 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திடீர் விபத்து, இதயநோய் உள்ளிட்ட ஏதேனும் மருத்துவ நிலை ஏற்பட்டால், சுகாதார அமைச்சினால் இலவசமாக இயக்கப்படும் 1990 ஆம்புலன்ஸ் சேவைக்கு உடனடியாக அழைப்பு விடுத்து சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பதுளை - ஹல்துமுல்ல பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிபொருள் பற்றாக்குறையால் வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாமல் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் பற்றாக்குறை இருந்தாலும், ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இதனால், 1990 ஆம்புலன்ஸ் சேவை மூலம் நோயாளிகளை உரிய மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியும்.