18 ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் கேது - புதன் சேர்க்கை ; அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் இந்த அரிய கிரக நிலை மாற்றம் ஆனது, சிம்மம் உட்பட 4 ராசியினரின் வாழ்க்கையில் எதிர்பாராத தன லாபத்தை கொண்டு வருகிறது.
இன்னும் 3 நாட்களில், அதாவது வரும் ஆகஸ்ட் 30, 2025 அன்று - வேத ஜோதிடத்தில் அரிய நிகழ்வாக கருதப்படும் கேது - புதன் சேர்க்கை நடைபெறவுள்ளது. கேதுவுடன் புதன் இணைய உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத தன லாபத்தை கொண்டு வரும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்கள் சொத்துக்களை அதிகரிக்கும் வாய்ப்புகளை கொண்டு வருகிறது. அதாவது, புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகளை கொண்டு வரும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் பக்கம் முடிவாகும். புதிய வாகனம், வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும், நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயங்களை தற்போது செய்து முடிப்பீர்கள்.
அதாவது, புதிய தொழில் தொடங்க விரும்பி நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த நபர்களுக்கு அவர்களின் விருப்பம் போல் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தலைமை பண்பு வெளிப்படும், பணியிடத்தில் சிறந்த தலைவர்களாக களத்தில் நிற்பீர்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசியினரின் ஜாதகத்தில் புதன் வலிமை பெற, வாழ்க்கை எதிர்பார்ப்புக்கு மிஞ்சிய பலன்களை கொண்டு வரும். அதிலும் குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை காணும் காலமாக இது அமையும். உலோகம் சார்ந்த தொழில் செய்து வரும் நபர்கள், தங்கள் தொழிலை இணையம் வழியே விரிவுப்படுத்தும் வாய்ப்பு பெறுவார்கள்.
உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும். வங்கி கடன் உதவி பெற்று, உங்கள் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பு காணப்படுகிறது - இருப்பினும், இந்த கடனின் அவசியம் அறிந்து அதனை வாங்குவது நல்லது.
துலாம் ராசி
துலாம் ராசியினரின் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் ஒரு கிரக நிலை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வார்த்தைகளை மூலமாக கொண்டு தொழில் செய்து வரும் நபர்களுக்கு சிறப்பான ஒரு காலத்தை இது கொண்டு வருகிறது. முதலீடுகள் வழியே எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும், குறிப்பாக பங்குச்சந்தை முதலீடுகளில் போதுமான வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும், வருமானத்தை பெருக்கும் வழிகளையும் பெறுவீர்கள்.
படைப்பாற்றல் மிக்க துலாம் ராசியினர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு காலமாக இது இருக்கும். கலைத்துறை, திரைத்துறை, எழுத்து, ஊடகம் போன்ற துறைகளில் பணியாற்றி வரும் நபர்களுக்கு ஒரு சிறப்பான காலமாக இது பார்க்கப்படுகிறது. நிதி நிலை மேம்படும், கடன் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும், வாழ்க்கை சிறப்பாக மாறும்
விருச்சிக ராசி
விருச்சிக ராசியினரின் தொழில் வளர்ச்சி தேவையான வாய்ப்புகளை இது கொண்டு வருகிறது. குறித்த இந்த காலத்தில், பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தப்படி ஒரு நல்ல பணி கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருக்கும் நபர்கள் தங்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆதரவு பெறுவார்கள், அவர்களின் ஒத்துழைப்புடன் தங்கள் தொழில் வாழ்க்கையில் காணப்படும் சவால்களை சமாளிப்பார்கள்.
பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும், உங்களுக்கு கீழ் பணியாற்ற ஒரு குழு உங்களுக்கு அளிக்கப்படும். புதிய பணிகள் ஒதுக்கப்படும், உங்கள் திறமைகளை நிரூபிக்க போதுமான வாய்ப்பு கிடைக்கும். புதன் கிரகத்தின் பார்வை உங்கள் மண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரும், திருமணம் முடிக்காதவர்களுக்கு விரைவில் திருமணம் முடிக்கும் வாய்ப்புகளை கொண்டு வரும்