போர் பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள்!
இஸ்ரேலில் தங்கியிருந்த 18 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று இன்று (19) காலை இலங்கை வந்தடையவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட 9 நபர்களும் இந்த குழுவில் உள்ளடங்குவதாக தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடுகடத்தப்பட்டவர்களைத் தவிர, மேலும் நான்கு இலங்கையர்கள் இன்று இஸ்ரேலில் இருந்து நாடு திரும்புவதற்காகப் புறப்படவுள்ளனர்.
மேலும் ஐந்து பேர் இலங்கைக்குத் திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் கெய்ரோ வானூர்தி நிலையம் ஊடாகப் பயணித்து, டுபாய் வழியாக இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடையும் இவர்களிடம், மேலதிக நடவடிக்கைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களுக்காக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.