கள்ளக்காதல் கொடூரம் ; 18 மாத குழந்தையை சுவற்றில் வீசி கொலை
இந்தியாவின் விஜயவாடா பகுதியில் 18 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு 5 வயது மகனும், 18 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
மேலதிக விசாரணை
கணவரின் நண்பரான வம்சி, அடிக்கடி அந்த வீட்டிற்கு வருகை தந்ததன் மூலம், அந்தப் பெண்ணுடன் நெருக்கம் வளர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், வம்சி தனியாக வாடகை அறையில் தங்கி வந்த நிலையில், அந்தப் பெண் கணவரிடம் தன் தாய் வீட்டிற்கு செல்கிறேன் என கூறி, அவ்வப்போது வம்சியின் அறைக்குச் சென்று வந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தில், குறித்த பெண் தனது 18 மாத குழந்தையுடன் வம்சியின் அறைக்குச் சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வம்சி, குழந்தையைப் பறித்து சுவரில் பலமாக வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், அந்தப் பெண் குடும்பத்தினருக்கு குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்திருந்தாலும், தெளிவான விளக்கம் அளிக்காததால் சந்தேகம் எழுந்துள்ளது.
குடும்பத்தினர் விஜயவாடா முழுவதும் குழந்தையைத் தேடியுள்ளனர்.
பின்னர், வம்சி இறந்த குழந்தையுடன் குளம் அருகில் இருப்பதை குடும்பத்தினர் கண்டறிந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், வம்சியை கைது செய்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றதாக வம்சி ஒப்புக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.