திருமண விருந்தில் கலந்து கொண்ட 172 பேர் வைத்தியசாலையில்; திகைக்கும் உறவினர்கள்!
ஹம்பாந்தோட்டையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட 280 பேரில் 172 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
பரிசோதனை நடத்த பணிப்புரை
ஹம்பாந்தோட்டை பொது சுகாதார பரிசோதகரின் தகவலுக்கமைய, விருந்தில் கலந்து கொண்ட மூன்று வைத்தியர்கள் உட்பட 172 பேர் தெபரவெவ, லுனுகம்வெஹர, அம்பலாந்தோட்டை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்தள அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் விருந்தின் போதே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் மல மாதிரிகளை பரிசோதித்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.