வவுனியாவில் 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்கப்பட்ட மாம்பழம்
வவுனியாவில் மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போதே இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் விடப்பட்ட மாம்பழம்
உக்குளாங்குளம் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
இதன்போது பலத்த போட்டிக்கு மத்தியில் 162,000 ரூபாவுக்கு மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இவ் மாம்பழத்தை வவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 162,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.