யாழ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 16 இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!
யாழ். கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (12-03-2023) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுக்கோட்டை மற்றும் நாகை பட்னத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் காரைநகர் கடற்பரப்பில் 4 மீனவர்ளும், பருத்தித் துறை கடற்பரப்பில் 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும், 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.