இலங்கையில் இந்த ஆண்டில் மட்டும் 16 முறை இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவங்கள்!
இலங்கையில் இந்த ஆண்டின் (2023) இதுவரை 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கங்களில் 06 புத்தள மற்றும்அதனை அண்டிய பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதியில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு (25-09-2023) மொனராகலை – புத்தல பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நில அதிர்வின் தாக்கம் மொனராகலை மற்றும் படால்கும்பர ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நில அதிர்வினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.