கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 150 தொன் ஒட்சிசன்!
இலங்கையில் கொரோனாவின் 3-வது அலை பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.இந்த பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்க இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
கொவிட்-19 தொற்றின் மூன்றாம் அலைக்கு எதிரான போராட்டத்துக்காக இந்தியா சுமார் 150 தொன் ஒட்சிசனை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
இலங்கை்கான இந்தியாவின் "Lifeline" திட்டத்தின் கீழ் இந்த ஒட்சிசன் அளவுகள் விசாகப்பட்டினம் மற்றும் சென்னையிலிருந்து ஒரு கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இலங்கை்கு அவசர ஒட்சிசன் பொருட்களை வழங்கி வருகிறது.
முதல் கட்டமாக, இந்திய கடற்படையின் சக்தி கப்பல் ஆகஸ்ட் 25 அன்று 100 தொன் திரவ மருத்துவ ஒட்சிசனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.