வவுனியாவில் 15 வயது மாணவி மாயம்; தாயார் முறைப்பாடு
வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில் மாணவியின் தாயாரால் வவுனியாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமபவத்தில் வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்பவரே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.
மாணவி தொடர்பில் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் 0778060470 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது வவுனியாப் பொலிஸாருக்கோ உடனடியாகத் தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.