இலங்கையில் இன்றும் 15 குறுகிய தூர ரயில் சேவைகள் ரத்து!
நாட்டில் மீண்டும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்றையதினம் (19-01-2025) 15 குறுகிய தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, ரயில் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக சுமார் 12 ரயில் சேவைகளும் நேற்று (17) இரத்து செய்யப்பட்டிருந்தன.
ரத்து செய்யப்பட்ட சேவைகளில், ஆறு குறுகிய தூர ரயில்கள் கொழும்பு கோட்டையை வந்தடையும், மற்ற ஆறு ரயில்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
லோகோமோட்டிவ் என்ஜின் சாரதிகள் பதவி உயர்வு தேர்வுக்கு தயாராகி வந்ததன் விளைவாக ரத்து செய்யப்பட்டது.
ரயில் சாரதிகளை தரம் 2 முதல் தரம் 1 வரை முன்னேற்றும் நோக்கில் நடத்தப்படும் இந்த பரீட்சை இன்று நடைபெறவுள்ளது,
இதில் ஏறக்குறைய 80 இயந்திர சாரதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.