இலங்கையில் மேலும் 15 பேர் கொரோனாவால் மரணம்!
இலங்கையில் நேற்றைய தினம் 15 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த தகவலை இன்று (15) வெள்ளிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றால் 13,821 பேர் மரணமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் கொரோனா மரணமடைந்தவர்களில் 6 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 13 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
இலங்கையில் இன்று (15) வெள்ளிக்கிழமை மாலை வரை 482 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5இலட்சத்து 43 ஆயிரத்து 867 பேர் ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 5இலட்சத்து 14ஆயிரத்து 573 பேர் குணமடைந்துள்ளனர். 15 488 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.