140 நாட்களுக்கு அதிஷ்டமளிக்க போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் நவகிரகங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் செயல்முறையை ராசி மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி கிரகங்களின் ராசி மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகத்தின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்கும். அந்தவகையில் செவ்வாய், புதன், குரு ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. இது வரும் 140 நாட்களுக்கு அதாவது 6 ஜனவரி 2023 வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
மிதுனம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி மூன்று (செவ்வாய், புதன், குரு) கிரகங்களின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை ஏற்படுத்தி தரும். அத்தகைய சூழ்நிலையில், வரும் 140 நாட்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அதேபோல் உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வரும் 4 மாதங்கள் மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் குடும்ப ஆதரவைப் முழுமையாக நீங்கள் பெறுவீர்கள். அதேபோல் பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் இருந்த தடைகள் இந்த காலக்கட்டத்தில் நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் (செவ்வாய், புதன், குரு) சஞ்சாரத்தில் இருந்து வரும் 140 நாட்கள் ஒரு வரப்பிராசாதாமக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள்.
மீனம்
இந்த மூன்று (செவ்வாய், புதன், குரு) பெரிய கிரகங்களின் சஞ்சாரத்தின் தாக்கம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த காலகட்டத்தில் நீங்கள் வணிகர்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம்.