14 வயது சிறுவன் சுட்டுக் கொலை: காட்டுக்குள் மறைந்திருந்த சந்தேகநபர்
அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற குழப்பம் ஒன்றின்போது 14 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு நபருடன் காட்டுப்பகுதியொன்றில் தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேகநபர், வீரகெட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பிரதான சந்தேகநபரைக் கைதுசெய்தபோது, கொலைக்காகப் பயன்படுத்தப்பட்டது எனக் கருதப்படும் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான நபர் வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.