13 வயதுடைய பாடசாலை மாணவன் விபரீத முடிவு; பெற்றோர் கூறிய அதிர்ச்சித் தகவல்
அம்பலாங்கொட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அவரது வீட்டில் இவ்வாறு இன்று (27) காலை உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மன உளைச்சலால் மரணங்கள் அதிகரிப்பு
மாணவனின் மரணத்திற்கு மன உளைச்சல் காரணமாக இருக்கலாமென பெற்றோர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, கடந்த சில வாரங்களில் நாட்டில் இவ்வாறு பல மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், 13 வயதுடை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
அண்மையில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற 2 ஆம் ஆண்டு மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிரை மாய்த்திருந்தார். இதற்கு காரணம் பகிடிவதையால் ஏற்பட்ட மன உளைச்சல் என்று கூறப்படுகிறது.
மேலும் வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரி கல்வி கற்கும் 2 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.