பிக்குவால் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்
13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து வரும் பிக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான பிக்கு விகாரையில் வசிக்கும் சிறுவன் ஒருவரை கொடூரமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
விசாரணை
தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எஹெட்டுவெவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி எஹெட்டுவெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.