கோட்டா கோ கமவிற்கு வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட 13 பேர்!
இலங்கை அரசாங்கத்திற்கு பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றையதினம் (04-05-2022) நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளை நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறியதாக 13 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மாலை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுக்காக முன்னிலையாவதற்காக கடுவலை நீதவான் நீதிமன்றில் பெருந்திரளான சட்டத்தரணிகள் ஒன்று திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை விடுதலை செய்யப்பட்ட 13பேரும் இன்றிரவு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவிற்கு வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.