போதையில் பேருந்து செலுத்திய 13 சாரதிகள் சிக்கினர்
மகரகம நாவின்ன பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (23) முற்பகல் 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை விசேட சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகளைச் சேர்ந்த 200 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) மருத்துவ அதிகாரி ஜே.எம். லியோனல் இது குறித்துத் தெரிவிக்கையில்,
“சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், 13 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பாவித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தொழிலதிபர் திருமணத்திற்காக அரண்மனை, சொகுசு விமானங்கள் ; போட்டோ-ஷூட்டில் வருங்கால மனைவி கொடுத்த ட்விஸ்ட்
கடந்த 2025 நவம்பர் மாதம் மாகும்புர பல்முனையப் போக்குவரத்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, தற்போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.