கேகாலையில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாலிபொட பகுதியில் 104 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் கேகாலை களுபஹன பகுதியில் 95.5 மில்லிமீற்றரும், நுவரெலியா மஸ்கெலியா பகுதியில் 85.5 மில்லிமீற்றரும், குருநாகல் பொல்பித்திகம பகுதியில் 85 மில்லிமீற்றரும், இரத்தினபுரி தமுல்ல பகுதியில் 82.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.