மூன்று பிள்ளைகளின் தந்தையால் 10 வயது சிறுமி துஸ்பிரயோகம்
தனமல்வில, (குடா ஓயா) பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை, இந்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதவான் நீதிமன்றம் சனிக்கிழமை (04) அன்று உத்தரவிட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் குடா ஓயா, பலஹருவ வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடையவர்
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் தணமல்வில தலைமையக பொலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் அப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தணமல்வில தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், தனமல்வில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.