10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை; முதலமைச்சர் விஜய் கடும் உத்தரவு
தமிழ்நாடு, கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்த சம்பவம் குறித்து விரைவான மற்றும் தீவிர விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
[
இந்த சம்பவத்தை "மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றம்" என விபரித்துள்ள முதலமைச்சர் விஜய், இத்தகைய செயல்களை நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிருக்குயிரான சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.