10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டிய நிலை வரும்!

Ministry of Education A D Susil Premajayantha Sri Lankan Schools
By Sulokshi Oct 03, 2022 09:46 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10ஆயிரம் பாடசாலைகள் ஒரு மாதகாலத்துக்கு மூடிவேண்டிய நிலை ஏற்படுமென தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அத்துடன் சாதாரண தர பரீட்சையையும் உரிய காலத்தில் நடத்த முடியாமல்போகும் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (3) ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே உட்டப எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை பிற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டிய நிலை வரும்! | 10 Thousand Schools Will Be Closed

 மாணவர்களுக்கு  காலம் போதாது

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிடுகையில், பரீட்சை திணைக்களம் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு அதிக காலம் எடுப்பதால், அடுத்த தவணை உயர் தர பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு அதற்காக தயாராவதற்கு காலம் போதாது. கடந்த வருட உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த மாதமே வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வருட உயர்தர பரீட்சை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியாயின் இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு 98 நாட்களே இருக்கின்றது.

10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டிய நிலை வரும்! | 10 Thousand Schools Will Be Closed

அதனால் உயர்தர பரீட்சையை 2 மாதங்களுக்காவது பிற்படுத்துமாறு அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். எனவே இதுதாொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்படுத்தினால் 10 ஆயிரம் பாடசாலைகள் ஒரு மாதகாலத்துக்கு மூடவேண்டி ஏற்படுகின்றது. மாணவர்களுக்கு ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவாகவே இடம்பெற்றிருக்கின்றுது.

நெருக்கடிகள்

ஒரு தாதத்துக்கு பாடசாலைகளை மூடிவிடுவதால் மாணவர்களின் பாடத்தவணைகளை உரிய காலத்துக்கு முடித்துக்கொள்ள முடியாமல் போகின்றது. அதேநேரம் பாடசாலை நேர அட்டவணைக்கும் பரீட்சை நேர அட்டவணைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது.

அத்துடன் உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதனால் அடுத்து இடம்பெற ஏற்பாடாகி இருக்கின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது.

10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டிய நிலை வரும்! | 10 Thousand Schools Will Be Closed

இதனால் சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது. இவ்வாறு சென்றால் ஒரு நிலைமைக்கு கொண்டுவர முடியாமல் போகும். கொவிட் தொற்று காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன, அதனால் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தற்போதுதான் ஓரளவுக்கு சரி செய்து வருகின்றோம்.

அத்துடன் உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதால் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கே கஷ்டமான நிலை ஏற்படுகின்றது. முதல் தடவையாக பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இரண்டாம் முறை பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கு 3 மாதம் வரை காலம் இருக்கின்றது. அவர்கள் பரீட்சைக்கான பாடநெறியை பூரணப்படுத்தி இருக்கின்றனர்.

என்றாலும் பரீட்சை விடயதானங்களை மாற்றி பரீட்சைக்கு முகம்கொடுப்பவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படலாம். அத்துடன் பரீட்சைகளை பிற்படுத்தும்போது அடுத்த வருட புதிய பாடசாலை தவணையை மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்க முடியாமல் போகும்.

கடந்த வருடம் புதிய பாடசாலை தவணை ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனால் இரண்டு தவணைகளையே எமக்கு பூரணப்படுத்த முடிந்தது. அடுத்த வருடமும் இந்த நிலையே ஏற்படும்.

என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை செய்ய முடியுமா என பரீட்சை திணைக்களத்திடம் முன்வைக்கின்றேன்.

அத்துடன் திகதியில் மாற்றம் ஏற்படும்போது ஏனைய மாணவர்களுக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதையும் கலனத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

நொச்சிமோட்டை, வைரவபுளியங்குளம்

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

02 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

நாவற்குழி, London, United Kingdom, திருநெல்வேலி

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Scarborough, Canada

01 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Harrow, United Kingdom, Buckinghamshire, United Kingdom

04 Dec, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Luzern, Switzerland

03 Dec, 2015
நன்றி நவிலல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, கோப்பாய் தெற்கு

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Kachcheri, நல்லூர், London, United Kingdom

03 Dec, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, Dillenburg, Germany

24 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, அச்சுவேலி, கொழும்பு, சென்னை, India

03 Dec, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, திருகோணமலை, Markham, Canada

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, கொழும்பு, Montreal, Canada

03 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, பிரான்ஸ், France

01 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Zürich, Switzerland, Aargau, Switzerland

30 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
50ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US