தினமும் வீணாகும் 10 பவுன் தங்கம் ; ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்
உலகெங்கும் உள்ள மக்களால் தங்கம் என்பது ஒரு ஆபரண பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் வாங்கி சேர்க்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது.
ஒரு பக்கம் அதை வர்த்தகத்திற்கு பலரும் பயன்படுத்தினாலும் பொது மக்களை பொருத்தவரை தங்க நகையை அணிவதை பெண்கள் பெருமையாகவும் கருதுகிறார்கள்.கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் நீடித்துவருகிறது.

எரிமலைக்குழம்பு
அண்டார்டிகாவின் ஆழத்தில் அமைந்துள்ள எரெபஸ் மலை, பூமியில் உள்ள மற்ற எரிமலைகளைப் போல் அல்லாமல் தனித்துவமானது.
உலகின் தென்கோடியில் உள்ள இந்த செயல்படும் எரிமலையில் நிரந்தரமான எரிமலைக்குழம்பு ஏரி இருப்பது மட்டுமல்லாமல், வளிமண்டலத்தில் தூய தங்கத்தின் நுண்ணிய படிகங்களை வெளியிடும் ஒரே அறியப்பட்ட எரிமலையும் இதுவே ஆகும்.
இதன் மதிப்பு ஆண்டுக்கு தோராயமாக 18.9 கோடி என சொல்லப்படுகிறது. இந்த தங்க துகள்கள் எரிமலையிலிருந்து 1000 கிலோ மீட்டர் தூரம் வரை பரவி அண்டார்டிகா பனிப்பாறைகளில் படிவதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
வெப்பமான எரிமலை வாயுக்களில், தங்கம் குளோரின் அல்லது கந்தகம் நிறைந்த சேர்மங்களுடன் இணைந்தவாறு மேல்நோக்கிக் கொண்டு செல்லப்படுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த வாயுக்கள் குளிர்வடையும்போது, தங்கம் பிரிந்து படிகங்களை உருவாக்குகிறது.
இருப்பினும், எரெபஸ் மலை, அறியப்பட்ட மற்ற எல்லா எரிமலைகளிலிருந்தும் மாறுபட்டுச் செயல்படுகிறது.