சுரேஷ சலேயால் சஜித் உட்பட 10 அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆதரவாக செயற்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
சுரேஷ் சலே தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த 10 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே இவ்வாறு வாக்குமூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
வாக்குமூலம் பெற நடவடிக்கை
குறித்த அரசியல்வாதிகளின் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குறித்த அரசியல்வாதிகளின் வசதிக்கேற்ப வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.