உலகின் சிறந்த 10 விமான நிலையங்கள் ; இலங்கைக்கும் இடமுண்டா?
உலகின் சிறந்த முதல் 10 விமான நிலையங்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த தரவரிசை, ட்ரெவல் அன்ட் லெசர் ( ravel and Leisure ) நடத்திய உலகளாவிய பயணிகள் கருத்து சேகரிப்பின் முடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலைய கட்டுமானத்தின் வடிவமைப்பு, உணவு மற்றும் சிறப்பான பயண அனுபவங்களின் அடிப்படையில் பயணிகள் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலில் துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 98.7 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
மேலும், சிங்கப்பூரின் சாங்கி, கட்டாரின் டோஹா, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய், ஹொங்கொங், பின்லாந்தின் ஹெல்சிங்கி, ஜப்பானின் டோக்கியோ, இந்தியாவின் மும்பை, தென்கொரியாவின் இன்ச்சோன் ஆகிய விமான நிலையங்கள் முறையே இந்த தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.
எனினும் இலங்கையின் எந்தவொரு விமான நிலையமும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.