மட்டக்களப்பு கல்லடியில் 09 பேருக்கு தொற்று; 7 பேர் தனிமைப்படுத்தலில்
இன்று மட்டக்களப்பு கல்லடி கிராமசேவகர் பிரிவிலுள்ள 20 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 09 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்தியர் அதிகாரி கே.கிறிசுதான் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு பிரயாணம் மேற்கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் அவருடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த மேலும் 20 பேரை தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த 20 பேருக்கும் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 09 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நகரிலுள்ள தனியார் கம்பனியில் கடமையாற்றும் 39 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எவருக்கும் தொற்று உறுதி இல்லை எனவும், எனினும் 7 பேரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.