சனிப்பெயர்ச்சியால் ராஜ யோகத்தை பெறும் ராசிகள் இவைதான்.. உங்க ராசி இருக்கா?
ஜோதிடத்தில் நீதி பகவானாக கருதப்படும் சனி பகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தில் சனி பகவான் இருக்கிறார்.
வரும் ஜூலை 2 ஆம் திகதி, ரேவதி நட்சத்திரத்தின் 2-ம் பாதத்திற்குள் நுழைகிறார். ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை இங்கேயே இருப்பார். இந்த மாற்றம் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக முன்னேற்றத்தை தரவுள்ளது.

எந்தெந்த ராசிகாரர்கள்
மிதுனம்: சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்குள் நுழைவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழில் வளர்ச்சி அடையும், பெரிய ப்ராஜெக்ட் கிடைக்கும். நீண்ட நாள் நோயிலிருந்து மீண்டு வரவும் வாய்ப்புள்ளது.
கடகம்: இந்த சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல நேரத்தைக் கொண்டு வரும். உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும், உங்கள் நிதி நிலைமை மேம்படும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலில் லாபம் பார்க்க வாய்ப்புள்ளது. ஒரு பெரிய பிரச்சனையும் தீரும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கையின் பல துறைகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு முழுப் பலனும் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் தொடங்குவதற்கும் இது நல்ல நேரம். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்: ஜூலை 2 முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்குகிறது. எதிர்மறை எண்ணங்களிலிருந்து நீங்கள் வெளியே வருவீர்கள். பணப் பற்றாக்குறை தீரும். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகலாம். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நேர்மறையாக உணர்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மனம் நிம்மதி பெறும்.