கஜகேசரி ராஜயோகம்; அதிர்ஷ்ட ம் கொட்டப்போகும் ராசிக்காரர்கள்
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து கொண்டே இருக்கும்.
அந்தவகையில் இந்த மாற்றம் அனைத்து ராசிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அது சுபமாகவோ அல்லது அசுபமாகவோ இருக்கலாம். சில சமயங்களில் ஒரே வீட்டில் குறிப்பிட்ட இரண்டு கிரகங்கள் சந்திக்கும் போது யோகங்கள் ஏற்படும். இதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள்.
வேத ஜோதிடத்தின் படி ஒரே ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்திருப்பது யுதி அல்லது சனியோகம் எனப்படும்.
கஜகேசரி ராஜயோகம்
இவை அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அப்படிப்பட்ட ராஜ யோகம் மே 17 ஆம் திகதி உருவாகியுள்ளது. தேவகுரு வியாழனும் சந்திரனும் இணைவதால் அரிய கஜகேசரி ராஜயோகம் உருவாகும்.
மே 17 ஆம் தேதி இரவு 7.39 மணிக்கு சந்திரன் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசிக்குள் நுழைந்தார். குறு பகவான் ஏற்கனவே மேஷ ராசியில் உள்ளார்.
இந்த இரண்டு கிரகங்களின் இணைவால் அதிர்ஷ்ட யோகமான கஜ கேசரி யோகம் உருவாகியுள்ளது. இந்த அதிர்ஷ்ட யோகம் ஜோதிடத்தில் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். அந்தவகையில், கஜகேசரி ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை பெறுவார்கள் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
கஜகேசரி ராஜயோகம் அமைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி, நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கும். புதிய வருமான வழிகள் திறக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். பதவி உயர்வு மற்றும் போனஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வாழ்க்கையில் புதிய நபர்களை சந்திப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு வியாழன் மற்றும் சந்திரன் இணைவதால் உருவாகும் கஜகேசரி யோகம் சாதகமான பலன்களைத் தரும்.
இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை, பதவி மற்றும் புகழ் கிடைக்கும். மேலும், திடீர் நிதி ஆதாயமும் பெறலாம்.
அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். உங்கள் ஆளுமையால் பத்து பேருக்கு முன்னுதாரணமாக நிற்கிறீர்கள்.