இலங்கை தமிழர்களை பிச்சைகாரர்களாக சித்தரிக்கும் தென்னிந்திய தொலைக்காட்சி; கொதிக்கும் நெட்டிசன்கள்
தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பாடல் போட்டி, இந்தியா, இலங்கையை தாண்டி புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.
கடந்த காலங்களில் இலங்கை பாடகர்களுக்கு வழங்கப்பட்ட ஆடைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கண்டணங்களும் இலங்கை தமிழர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.

போட்டியாளர்களின் திறமைக்கு மதிப்பளியுங்கள்
அது தொடர்பில் சமூக ஊடகங்க்களிலும் பரவலான விவாதங்கள் இடம்பெற்றிருந்தது. அதாவது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லும் இலங்கை சிறுமிகளுக்கு வழங்க்கப்படும் ஆடைகள் மிகவும் மோசமானதாக உள்ளதுடன், போட்டியாளர்கள் பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் கதையை உருவாக்கி அளந்து விடுகின்றது குறித்த தொலைக்காட்சி.
அந்தவகையில் இம்முறையும் குறித்த தொலைக்காட்சியின் பாடல் போட்டிக்கு சென்ற இலங்கை சிறுமி அணிந்துள்ள ஆடை தொடர்பில் கடும் சினம் வெளியிடப்பட்டுள்ளது.
போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை தமிழர்களின் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர உங்களின் TRP க்காக இலங்கை தமிழர்களை இவ்வாறு இழிவு படுத்துவதை நிறுத்த வேண்டும் என சமூகவலைத்தள வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.