யாழில் வழிமாறிச்செல்லும் இளையவர்கள்; வெளியான பகீர் காணொளி! (Video)
யாழ்ப்பாண மாவட்டத்தில் இளையோரை போதை எனும் அரக்கன் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். வசதியான வீட்டு பிள்லைகள் ஆனாலும், வறி குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் போதைக்கு அடிமையாகி வருகின்ற கொடுமை அதிகரித்து செல்லுகின்றது.
கல்விக்கும் பண்பாட்டிற்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் தற்போது ஒழுக்ககேடுகளும் , சமூக பிறள்வான நடத்தைகளும், போதைக்கு அடைமையாகும் இளைய சமுதாயமுமாக சீரழிந்து கொண்டிருக்குகின்றது யாழ்ப்பாண தேசம் .
இதனை கண்டும் காணாமல் இருக்கின்றார்களா? அல்லது வேண்டுமென்றே யாழ்ப்பாண சமூகத்தை திட்டமிட்டு பழிவாங்கின்றார்களா எனும் ஐயப்பாடும் எழுதுள்ளது. போர்க்காலத்தில் கூட உணவுக்கு வழியில்லாத போதும் யாழ் மக்கள் சீர்கெட்டு போனதில்லை.
உணவுக்கு வழியில்லாத போதும் யாழ் மக்கள் சீர்கெட்டு போனதில்லை
ஆனால் போதைப்பொருள் புழக்கம் எனபது யாழ்ப்பாணத்தில் தற்போது சர்வசாதாரணமாக போய்விட்டது. எமது சமூகத்தில் தலைவிரித்தாடும் வன்முறைகளும் , படிக்கவேண்டிய வயதி தறிகெட்டு திரியும் இளம் சமுதாயம் பாழ்பட்டு போவதற்கும் யார் காரணம்?
இப்படியே சென்றால் நாளைய சமுதாயம் எப்படி இருக்கும் என்ற கவலையை சமூக ஆர்வலர்கள் மத்தியில் தோற்றிவித்துள்ளது இக்காணொளி. வறிய குடுபத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைக்கு அடிமைப்பட்டு அது இல்லாமல் தன்னால் வாழ்முடியாது என கூறும் அவலத்தை கண்கூடாக காணுகையில் நெஞ்சம் பதறுகின்றது.
விழித்துக்கொள் எம் இனமே. நாளைய விடியல் நல்லதாக இருக்க போதைப்பொருள் எனும் அரக்கனை எம் தேசத்தில் இருந்து விரட்டினால் தவிர எமக்கு விடிவில்லை என்பதை புரிந்துகொள்.