யாழில் குழந்தையுடன் சென்ற பெண்களை மோதி தள்ளிய இளைஞர்கள்
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குழந்தையொன்றும் இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களை பின்னால் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு இளைஞர்கள் மோதி விட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
போதையில் வந்த இளைஞர்கள்
இளைஞர்கள் இருவரும் போதையில், நிதானமின்றி மோட்டார் சைக்கிளை விபத்தினை ஏற்படுத்தும் விதமாகவும் , வீதியில் பயணித்தோருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகின்றது.
முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விட்டுத் இளைஞர்கள் தப்பிச் சென்றதாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், த் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை இனம் கண்டுள்ள நிலையில் இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.