வவுனியாவில் கைக்குண்டுகள் வழக்கு ; இரண்டாவது சந்தேகநபர் கொழும்பில் கைது
வவுனியா, நேரியகுளம் பகுதியில் பெருந்தொகையான வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் கொழும்பிற்கு அழைத்துவரப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா, நேரியகுளம் பகுதியில் கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு உதவி புரிந்தமை தொடர்பில், மற்றுமொரு இளைஞன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
துட்டுவாகை பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞன் ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இளைஞர்களும் மேலதிக விசாரணைகளுக்காகப் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொட பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவல்களுக்கு அமைய, வவுனியா நேரியகுளம் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போது குறித்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.