நீதிமன்றத்தில் உந்துருளி திருடிய இளைஞன்
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவரின் உந்துருளியை திருடிச் சென்ற நபரை ஹம்பாந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் சூரியவெவ, அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிரிபோபுராவில் கைது
கதிர்காமத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர், மற்றொரு நபருக்கு பிணை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக தனது உந்துருளியில் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, அவர் உந்துருளியை நீதிமன்றத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று திரும்பி வந்தபோது அவரது உந்துருளி திருடிச் செல்லப்பட்டமை தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் ஹட்பாந்தோட்டை பொலிஸரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உந்துருளியை திருடிச் சென்ற சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை சிரிபோபுராவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.