யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் மாயம்!
மீன் பிடித்து கொண்டிருந்த நபர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணியில் ஆரம்பமாகி உள்ளது.
இச் சம்பவம் யாழில் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் இவ்வாறு காணாமல் போயுள்ளதக தெரிய வந்துள்ளது.
சம்பவம்
நேற்று (22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஒரு இளைஞர் தவறி விழவே ஏனையவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞனே தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞனைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தப்பி சென்றுள்ளவர்களில் மூன்று இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.