யாழ் வீடொன்றில் திருடிய இளைஞர் கொழும்பில் கைது
யாழ் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் வீட்டில் திருடிய கைப்பேசி மற்றும் பணத்தொகை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
யாழ் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 16ஆம் திகதி இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது வீட்டில் இருந்த பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும் ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது.
அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (19) கொழும்புத்துறை பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் வீட்டில் திருடப்பட்ட கையடக்க தொலைபேசியும் ஒரு தொகை பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.