தமிழ் இளைஞன் வேட்டியையும் சிங்கள இளைஞன் சாரத்தையும் அணிய வெட்கப்படக் கூடாது; நாமல்
நாட்டின் பிரஜைகள் யாராக இருந்தாலும் நாட்டின் கலாசாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என எம். பி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெரமுனவின் தங்காலை தொகுதியின் கிளை அமைப்புகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பெற்றோரின் கடமை
கலாசாரத்தை மதிக்கும் பிள்ளைகளை சமூகத்திற்கு வழங்குவது பெற்றோரின் கடமை. சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் ஆகிய எந்த கலாசாரத்திற்கும் உகந்த வகையில் பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.
இதுவே பெற்றோர் என்ற முறையில் தமது கடமையும் பொறுப்புமாகும் எனவும் நாமல் கூறினார்.
அத்துடன் முஸ்லிம் பிள்ளை முஸ்லிம் கலாசாரத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியவும், தமிழ் இளைஞன் வேட்டியை அணியவும் சிங்கள இளைஞன் சரத்தை அணியும் வெட்கப்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கலாசாரம் மற்றும் சமயங்களை மதிக்கும் சமூகத்தின் ஊடாக நாடடின் பொருளாதார அபிவிருத்திக்கான பிரதிபலன்களை அடைய முடியும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அதேவேளை நாமல் ராஜபக்க்ஷ இரு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.