இளைஞர் செய்த தகாத செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்
பிங்கிரிய, வத்துஹெர பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுவெல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிரடிப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வத்துஹெர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபர் ஒருவரும், அவரிடம் இருந்து 100 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.