யாழ்ப்பாணத்தில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்குதல் ; ஒரு வருடத்தின் பின் சிக்கிய நபர்
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் சுமார் ஒருவருட கால பகுதிக்கு பின்னர் நேற்று(9) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த வருடம் முற்பகுதியில் வீதியில் சென்ற இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
பதுங்கியிருந்த சந்தேகநபர்
அந்த விசாரணைகளின் அடிப்படையில் , மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
பிரதான சந்தேகநபர் பதுங்கியிருந்த இடம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதான சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.