துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞர் சிகிற்சை பலனின்றி உயிரிழப்பு!
நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பகுதியில் இன்று சனிக்கிழமை (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெல்லம பிரதேசத்தில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு
இதன்போது பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிட்டிபன பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை துங்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இவ்வருடத்தில் நிறைவடைந்த முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 40 துப்பாக்கிச் சூட்டுப் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.