மதுபோதையில் வீதியில் செல்பவர்களை கொடூரமாக தாக்கிய இளைஞர் குழு! வவுனியாவில் சம்பவம்
வவுனியாவில் வீதியில் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் இருவரை தாக்கிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வவுனியா, கோவில்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
வவுனியா, கோவில்குளம் பகுதியில் வீதியில் செல்பவர்களை வழிமறித்து இளைஞர் குழுவொன்று வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் குழு வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.