யாழில் இளம் பெண்ணுடன் சிக்கிய இளைஞர்கள் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 09 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைபொருட்களுடன் 25 வயதிற்குட்பட்ட யுவதி உட்பட இரு இளைஞர்கள் அடங்கலாக மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்த மூவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்ட. சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.