அதிவேக வீதியில் வசமாக சிக்கிய இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
கொடகம அதிவேக நெடுஞ்சாலையில் 11 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கார் ஒன்றில் பயணித்த இரண்டு சந்தேகநபர்கள் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொடகம அதிவேக நெடுஞ்சாலையில், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பாலட்டுவ வெளியேறும் சந்திக்கருகில் வைத்து நேற்று (14) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார், சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

போதைப்பொருள்
கொழும்பிலிருந்து வந்த குறித்த காரிலிருந்த சாரதியும், மற்றொரு நபரும் காரை நிறுத்தி அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் பயணித்த காரைச் சோதனை செய்த அதிகாரிகள் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 6 கிலோகிராம் ஐஸ் மற்றும் 5 கிலோகிராம் ஹெரோயின் ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தனர்.
கைதான நபர்கள் இருவரும் 20 மற்றும் 21 வயதுடைய மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் மற்றும் மீட்கப்பட்ட போதைப்பொருள் என்பன பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.